தமிழ்நாடு

பிரத்யேக செய்தி : மாணவர் விவரங்கள் திருட்டு - தேர்வுத்துறை புகார்

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்ட சம்பவம், தொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள், நேற்று , காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

தந்தி டிவி

2017ம் ஆண்டு முதல் மாணவர்களின் தேர்வு முடிவுகள், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூலம் ஆன்லைன் வழியில் மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டதாகவும், நடப்பாண்டில், 27 லட்சத்து 28 ஆயிரத்து 861 மாணவர்களுக்கு மொபைல் எண்கள் மூலம் முடிவுகள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் விபரங்களை, வியாபார ரீதியாகவும், தவறான வழிமுறைகளுக்காகவும் திருடப்பட்டுள்ளதாவும், இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளதாகவும்,

இது அரசுக்கும், தேர்வுத்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்டஇணையதளங்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தமது புகாரில் வலியுறுத்தியுள்ளார்

இந்த புகார் மனுவுடன், பல்வேறு ஆவணங்களையும் தேர்வுத்துறை அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

மாணவர்களின் விபரங்கள், யார், யாருக்கு வழங்கப்படுகிறது, மாணவர்களுக்கு மொபைல் போனில் தேர்வு முடிவுகளை அனுப்பும் ஒப்பந்தத்தை பெற்றவரின் விபரம் உட்பட பல்வேறு தகவல்களை தேர்வுத்துறை அளித்துள்ளது.

இதனடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி