இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆவணப்பதிவு, நிலுவையில் வைத்தல் மற்றும் பதிவு செய்ய மறுத்தல் உள்ளிட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு சார்பதிவாளர்கள் கையெப்பமிட்ட படிவத்தை வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சார்பதிவாளர் வாய்மொழியாக ஆவணப்பதிவை மறுத்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.