தென் கடல் பகுதியில் சீற்றம் - 2ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. யாஸ் புயல் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், படகுகள் நிறுத்தும் துறைமுகத்தில் 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுகின்றன. மேலும், புயல் உருவாகி இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.