தமிழ்நாடு

வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி மோசடி புகார் - செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு

சென்னை, மதுரை உட்பட 10 இடங்களில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.

தந்தி டிவி

கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி வருவதாக கூறி ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த நிலையில், கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதவரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

சென்னை மேற்கு ஜெ.ஜெ நகரில் உள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசன் வீட்டில் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையில் 6 மணி நேரம் சோதனை நடைபெற்றது. மோசடியில் கணேசனும் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் சோதனை முடிந்த நிலையில், தமிழகத்தில் சில இடங்களில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்