தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் வகுப்பு 2ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணை இயக்குநராக இருந்த அமுதவல்லி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், வை.குமார், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும், பி.குமார் அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணை இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளார்.