ராமேஸ்வரம் அடுத்த பேக்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில், மணல் சிற்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கை குலுக்காமல் வணக்கம் சொல்வது, கை கழுவுவது, வாயை மூடி இருமுவது உள்ளிட்ட செயல்பாடு மணல் சிற்பத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. கலாமின் நினைவிடத்திற்கு வந்த மக்கள், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை பார்வையிட்டு சென்றனர்.