அங்கன்வாடி மையத்தின் அமைப்பாளர் சத்யா சுரேஷ் என்பவர் இந்த மையத்தை மேம்படுத்த முயன்று வருகிறார்.
அதேபோல் அங்கன்வாடி மையத்தின் தோற்றத்தை மாற்றி குழந்தைகளை கவரும் வண்ணம் டோரா புஜ்ஜி, கிருஷ்ணா பீமா என குழந்தைகளை கவரும் பல ஓவியங்களை வரைந்துள்ளார்.
அதுமட்டுமின்றி குழந்தைகள் விளையாடி மகிழ சில விளையாட்டு பொருட்களையும் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ஆங்கில பாடல் மற்றும் கதைகளை கூறி குழந்தைகளை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்.
இதனால் தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள் கூட தற்போது இந்த அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்து வருகின்றனர்.
இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நேரத்திற்கு தகுந்தவாறு சிறப்பான உணவுகளும் சத்துமாவு போன்றவைகளும் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.