ஏழை குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் சிறப்பு நிதி உதவி திட்டத்திற்கான மனுக்கள் அளிப்பதற்காக கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்தனர். மனுக்கள் அளிக்க கடைசி நாள் என வதந்தி பரவியதையடுத்து ஒரே நேரத்தில் ஏராளமானோர் நகராட்சி அலுவலத்தில் திரண்டனர். சேலம் சாலை முதல் நகராட்சி அலுவலகம் வரை மக்கள் கூட்டம் அலை மோதியது.