ரவுடியிடம் துணிச்சலாக அரிவாளை பறித்த பெண் போலீஸ்
தூத்துக்குடியில் சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சுற்றித்திரிந்த ரவுடியிடம் இருந்து அரிவாளை பெண் போலீஸ் அதிகாரி துணிச்சலுடன் பறித்தார். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ரவுடி ராஜா கையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்தார். அப்போது அங்கு வந்த தென்பாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் தரணியா, ராஜாவின் அரிவாளை பறித்ததுடன், மோதலில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.