விருதுநகர் அடுத்த சத்திரரெட்டியபட்டி பகுதியில் லாரி - கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து சிவகாசியில் நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வில்சன் தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வில்சன், சாந்தமேரி, நிர்மலா மற்றும் அந்தோணி முத்து ஆகியோர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் காரை உடைத்து அவர்களை பத்திரமாக மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்