புதுக்கோட்டை அருகே, சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.... திருச்சியில் இருந்து விராலிமலை, காரையூர் வழியாக பொன்னமராவதி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை டிரைவர் சீனிவாசன் ஓட்டியுள்ளார். காரையூர் அருகே பேருந்து வந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக இடது புறமாக பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களோடு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து, காரையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.