ராமேஸ்வரம் தனுஷ்கோடி வடக்கு கடற்கரைப் பகுதியில் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கிடைப்பதாக கடற்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூட்டை மூட்டையாக கரை ஒதிங்கி கிடந்த பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். பீடி இலைகள் எங்கிருந்து கடத்திச் செல்லப்பட்டது என்று குறித்து மத்திய மாநில உளவுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.