கனமழையால் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம், ராஜூவ் காந்தி நகா், ராஜா நகா், அய்யன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற மாவட்ட ஆட்சியா் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கினர். மேலும், மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனா்.