தமிழ்நாடு

Ramanathapuram Child Death | 3 வயது குழந்தை துடிதுடித்து பலி - விசாரணையில் வெளியான பகீர் தகவல்

thanthitv

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தனியார் பள்ளி வாகனம் மோதியதில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை அருகே பாசிப்பட்டிணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து - கௌசல்யா தம்பதியின் 3 வயது மகள் இன்று காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஷிவானிகா படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தை மீது மோதியது தனியார் பள்ளி பேருந்து என்பது கண்டறியப்பட்ட‌து. இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் அந்தோணி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தங்களது ​குழந்தை வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததை அறியாத பெற்றோர், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஷிவானிகா படுகாயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு எஸ்.பி.பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.​ அதனைத் தொடர்ந்து, குழந்தை ஷிவானிகாவின் பெற்றோர் இது குறித்து எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் எஸ்.பி.பட்டிணம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தனியார் பள்ளி வாகனம் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

Rajasthan | SPY | டீக்கடை போட்டு உளவு பார்த்த இளைஞர்.. அதிரடியாக தூக்கிய போலீசார்

TNEB | "இனி கலந்தாய்வு மூலம் தான்" - மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு

CM Vijay | Chennai | சர்வதேச தரத்தில் சென்னைக்கு 3வது மாஸ்டர் பிளான் - CM விஜய் அதிரடி உத்தரவு

Breaking | MK Stalin | DMK | நேற்று வெளியான வெள்ளை அறிக்கை | ஸ்டாலின் திடீர் ஆலோசனை

ADMK | TVK | 4 MLA-கள் ராஜினாமா ஏற்பு.. ஹைகோர்ட் கொடுத்த உத்தரவு