தமிழ்நாடு

10 நாள் பயணமாக இமயமலை சென்ற ரஜினிகாந்த் : பாபாஜி குகையில் தியானம்

10 நாள் பயணமாக இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள பாபாஜி குகையில் தியானம் செய்வதோடு, பல்வேறு கோயில்களிலும் வழிபாடு நடத்தி வருகிறார்.

தந்தி டிவி

10 நாள் பயணமாக இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள பாபாஜி குகையில் தியானம் செய்வதோடு, பல்வேறு கோயில்களிலும் வழிபாடு நடத்தி வருகிறார். பிரிக்க முடியாதது... ரஜினியும், இமயமலை பயணமும் என கூறலாம். இமயமலை பயணம் பற்றி தன் படங்களிலும் ரஜினி பேசியிருக்கிறார். தர்பார் படத்தின் பணிகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இமயமலைக்கு பயணம் சென்றுள்ளார். கடந்த சில வருடங்களாக படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த அவர், தற்போது இமயமலைக்கு 10 நாட்கள் ஆன்மீக பயணம் சென்றுள்ளார். முதல் நாள் ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் உள்ள தயானந்த ஆசிரமத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார். அங்குள்ள தயானந்த சுவாமியின் சமாதியில் தியானம் செய்த ரஜினிகாந்த், கங்கா ஆரத்தியையும் பார்த்தார். இரவு அங்கேயே தங்கிய அவர், ஆசிரமத்தில் கொடுக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட்டார்.

அதன்பிறகு ஹெலிகாப்டரில் கேதார்நாத் சென்ற அவர் சிவன் கோயிலில் சாமி கும்பிட்டார். மேலும் அங்குள்ள சில குகை கோவில்களிலும் வழிபாடு நடத்திய அவர், அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வதோடு, தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். பாபாஜி குகையில் தியானம் மேற்கொண்டு வரும் ரஜினிகாந்த் கம்பளிப் போர்வை, குல்லாவுடன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். மேலும் அவர் இமயமலைப் பகுதியில் வழிபாடு நடத்தும் படங்களும் வெளியாகியுள்ளன. உள்ளூர் மக்களோடு ஆர்வமாக உரையாடிக் கொண்டும் பக்தர்களில் ஒருவராக நடந்து செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. மரங்கள் அடர்ந்துள்ள மலைப்பாதையில் நடிகர் ரஜினிகாந்த் நடந்து செல்லும் காட்சிகளும் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி