தமிழ்நாடு

கலைஞானத்துக்கு வீடு வாங்கி கொடுத்த ரஜினி - சொன்ன வாக்கை நிறைவேற்றியதாக கலைஞானம் உருக்கம்

திரைப்பட தயாரிப்பாளரும் கதாசிரியருமான கலைஞானத்துக்கு சொந்த வீடு வாங்கித் தருவதாக கூறிய தனது வாக்கை நடிகர் ரஜினிகாந்த் நிறைவேற்றியுள்ளார்.

தந்தி டிவி

90 வயதாகும் கலைஞானம், 70 ஆண்டுகால திரை வாழ்க்கையில், கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என திறமையை வெளிப்படுத்தியவர். ஆனால், சொந்த வீடு கூட இல்லாமல் தவித்து வந்தார்.

கலைஞானத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம், நடந்த பாராட்டு விழாவில் அமைச்சசர் கடம்பூர் ராஜு, சிவகுமார், பாரதிராஜா, பாக்யராஜ், ரஜினி பிரபலங்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிவகுமார் பேசிய போது தான், கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் இருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

இதையடுத்து பேசிய ரஜினிகாந்த், கலைஞானம் வாடகை வீட்டில் இருப்பது தனக்கு இப்போது தான் தெரியும் என்றும், தானே அவருக்கு சொந்த வீடு வாங்கித் தருவேன் என்றும் உறுதி அளித்தார்..

இதன்படி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், 3 படுக்கையறை வசதி கொண்ட ஒரு வீட்டை கடந்த வாரம் ரஜினி பதிவு செய்து கொடுத்தார்.

இதையடுத்து, சரஸ்வதி பூஜை தினமான இன்று காலை புது வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த், பூஜையறையில் குத்து விளக்கேற்றி, பாபா படம் ஒன்றையும் கலைஞானத்துக்கு பரிசளித்தார்.

இந்நிலையில் கொடுத்த வாக்கை ரஜினி நிறைவேற்றி விட்டதாக உருக்கத்துடன் தனது நன்றி தெரிவித்துள்ளார், கலைஞானம்...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி