வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனக்கும் தனது கணவர் முருகனுக்கும் பரோல் வழங்கக்கோரி தமிழக முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோருக்கு கடந்த புதன்கிழமை கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். இதனையடுத்து நளினி, முருகன் ஆகியோருக்கு பரோல் வழங்கப்பட்டால் தங்கும் வசதி, பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, வேலூர் மாவட்ட காவல்துறைக்கு சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அலுவலகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காவல்துறையினர் கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த சூழலில் நளினி - முருகனுக்கு பரோல் வழங்க இயலாது எனவும் வேலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.