ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குதிரை பந்தயம் நடைபெற்றது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். தமிழ் புத்தாண்டு தொடங்கி ஜுன் மாதம் வரை நடைபெற உள்ள குதிரை பந்தயத்திற்காக மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து, 500 குதிரைகள் ஊட்டிக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.