கடந்த 2 மாதங்களுக்கு பிறகு தற்போது பூங்காவில் நடைபயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினசரி காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சி மேற்கொள்ள மாதம் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்திய மக்கள், பனிமூட்டம் நிறைந்த காலை பொழுதில் தாவரவியல் பூங்காவில் உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொண்டனர்.