நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் விதமாக வனவிலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 16 லட்சம் மதிப்புள்ள இந்த தகவல் மையத்தில் வனவிலங்குகள் மற்றும் பறவைகளுடன் அவை குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. கோடநாடு காட்சி முனையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளிடம் இந்த தகவல் மையம் நல்ல வரவேற்பு பெறும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.