நீலகிரி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு பின் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால், மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு, மரங்கள் சாய்ந்து, மண் சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பாதை சரிசெய்யப்பட்ட நிலையில், மழையும் குறைந்ததால் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.