பராமரிப்பின்றி புதிய பேருந்து நிலையம் - சமூக ஆர்வலர்கள் புகார்
திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒன்றரை வருடமே கடந்த நிலையில் பேருந்து நிலையம் சுகாதாரமின்றியும், பயணிகள் அமரும் இருக்கைகள் உடைந்தும், பல இடங்களில் மதுபாட்டில்கள் குவியலாக கிடப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்துவதோடு, இதுபோன்று நிகழாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.