நளினியின் தாய் பத்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், இந்தியாவுக்குள் உறவினர்கள், நண்பளுடன் பேச அனுமதிக்க தயார் எனவும், வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு,உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக நாளை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.