நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய நிகழ்வான வசந்த பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி கடலில் மீன்வளம் பெருகும் வகையில் பால், பலம் உள்ளிட்ட பொருட்களை கடலில் விட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. சமுத்திர ராஜனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.