திருமண தகவல் இணையதளம் மூலம், பல பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலையை சேர்ந்த வித்யூத் என்ற சக்கரவர்த்தி அமெரிக்காவில் மருத்துவராக இருப்பதாக கூறி, திருமண தகவல் இணையதளம் மூலம் சென்னையை சேர்ந்த ஒரு பெண் மருத்துவ அதிகாரியை ஏமாற்றியுள்ளார். சக்கரவர்த்தி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரியல் எஸ்டேட் தொழில் செய்ய சுமார் 7 கோடி ரூபாய் வாங்கியதாக, அந்த பெண் தெரிவித்துள்ளார். இதே போல் சக்கரவர்த்தி தமிழகம் முழுவதும் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி 9 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சக்கரவர்த்தியிடம் போலீசார் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.