இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரையில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் பிசிஆர் கருவி உள்ளது. அந்த கருவியை இயக்கக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர். ஆனாலும் கடந்த இரண்டு மாதமாக அந்த அறைகள் பூட்டியே உள்ளன. இதை விட ஐசிஎம்ஆரின் அலட்சியத்தை வெளிக்காட்டக்கூடிய விஷயங்கள் ஏதாவது இருக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.