* கள்ளக் காதலன் சுந்தரத்தின் ஆலோசனையின் பேரில், தனது குழந்தைகளை கொன்று விட்டு, அபிராமி திருவனந்தபுரத்துக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, தனிப்படை போலீஸார் முதலில், தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
* அங்கு காட்சிகள் எதுவும் பதிவாகாததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபோது, இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில், துப்பட்டாவால் முகத்தை மறைத்திருந்த அபிராமி, டோக்கன் பெறுவதற்காக, துப்பட்டாவை கழற்றியபோது, அவரது உருவம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக தெரிந்தது.
* மேலும், போலீஸார் தன்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக, சிம் கார்டை உடைத்து விட்டு அபிராமி சென்றுள்ளார். திருவனந்தபுரம் சென்ற பிறகு, அதை கள்ளக் காதலன் சுந்தரத்திடம் தெரியப்படுத்துவதற்காக, வேறு ஒருவரிடம் செல்போனை பெற்று, சுந்தரத்துக்கு அபிராமி பேசியுள்ளார். இதையடுத்து, சுந்தரம் மூலமே அபிராமியை, நாகர்கோவிலுக்கு வரவழைத்து அவரை போலீஸார் பிடித்துள்ளனர்.