தமிழ்நாடு

தமிழக-ஆந்திர எல்லையில் நடுரோட்டில் இரண்டு நாட்களாக தவித்த 400 பேர்...

கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் இரண்டு நாட்களாக தவித்த தொழிலாளர்கள், தமிழக அதிகாரிகளின் தலையீட்டை தொடர்ந்து அதிகாலை 2 மணி அளவில் ஆந்திராவிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 400 பேர், சென்னையில் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். வேலையில்லாத காரணத்தால் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து பேருந்து, கார் மற்றும் வேன்களில் ஆந்திரா நோக்கி புறப்பட்டனர். இதற்காக ஆன்லைனில் அவர்கள் இ-பாஸ் பெற்று உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன சோதனை சாவடியை கடந்தபோது, அவர்கள் சென்ற வாகனங்களை ஆந்திர போலீசார் தடுத்து நிறுத்தி நடு ரோட்டிலேயே இறக்கிவிட்டனர். ஆந்திர எல்லைக்குள் அவர்களை அனுமதிக்காததால் கடந்த இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதி இன்றி தவித்து வருகின்றனர். சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். இது குறித்து அறிந்த தமிழக அதிகாரிகள் ஆந்திர அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினர். இதையடுத்து இன்று அதிகாலை 2 மணி அளவில் அனைத்து தொழிலாளர்களும் ஆந்திராவிற்குள் அனுமதிக்கப்பட்டனர்

Nellai Murder | கல்லால் அடித்தே இளைஞர் கொ*ல - கொடூரத்தில் முடிந்த தகராறு.. நெல்லையில் அதிர்ச்சி

BREAKING | TN Politics | BJP | அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு - எகிறும் பல்ஸ்

TNEB Hard Disk | 16 ஹார்டு டிஸ்க்குகள் மீட்பு - "EB துறையுடையது மட்டுமல்ல.." - வெளியான ரிப்போர்ட்

BREAKING || கடந்த ஆட்சியின் காலை உணவு திட்டம் - முக்கிய முடிவெடுத்த தவெக அரசு

IPS Transfer | CM Vijay | 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - CM விஜய் அதிரடி