கோவில்பட்டி அருகே உள்ள பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கான இலவச மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மாணவர்களுக்கு காலணி முதல் மடிக்கணினி வரை அத்தனையும் இலவசமாக கொடுத்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததால் இந்த ஆண்டில் 434 அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய முதல் மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.