Koai | நடுரோட்டில் வடமாநில இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்.. தப்பிக்க துடித்த காட்சி #Kovai #viralvideo #thanthitv கோவை வெரைட்டி ஹால் சாலையில், மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த வடமாநில இளைஞரிடம் செல்போன் மற்றும் பணத்தைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் மூன்று பேரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய வடமாநில இளைஞர் ஒருவர், அருகிலிருந்த கடையின் முன்பு போதையில் படுத்துத் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர், இளைஞரின் கை, கால்களைப் பிடித்து அழுத்தியபடி, அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறிக்க முயன்றுள்ளனர் இதனை அவ்வழியாகச் சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.