மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக் கானலில், அழகிய நட்சத்திர ஏரியை உருவாக்கிய சர் ஹென்றி லெவின்ஜினின் 200 வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க அவரது எள்ளுப்பேரன் நிக் லெவின்ஜ், தமிழகம் வந்துள்ளார். அவருக்கு, கொடைக்கானலில், பள்ளி மாணவர்கள் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது.