இதனையொட்டி, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சோதனைச் சாவடியில் அந்த மாநில போலீசார், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திலிருந்து கர்நாடகம் நோக்கி சென்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அந்த மாநில போலீசார் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கின்றனர். உத்தரவை மதிக்காமல் செல்பவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி திருப்பி அனுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.