தமிழ்நாடு

முன் அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு

முன் அனுபவம் இல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றபோது, ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

* திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

* அவரின் மனைவி கிருத்திகா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

* இந்த நிலையில், மீண்டும் கர்ப்பமான கிருத்திகா வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளார்.

* இதற்காக அவர், பிரசவம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. கிருத்திகாவுக்கு கடந்த 22ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

* இதையடுத்து கணவர் கார்த்திகேயனின் நண்பரான பிரவீனின் வீட்டிற்கு அவர் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

* ஆனால் முன் அனுபவம் இல்லாதவர்களால் பிரசவம் பார்க்கப்பட்டதால் கிருத்திகாவின் உடல்நலம் பாதிக்கப்பட, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கிருத்திகா உயிரிழந்துள்ளார்.

* இந்த சம்பவம் தெரியவர அதிர்ச்சி அடைந்த கிருத்திகாவின் தந்தை, காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன், உடனிருந்த அவரது நண்பர் பிரவீன் அவரது மனைவி லாவண்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* முன் அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்த்து ஒரு உயிர் பலியான சம்பவம் கிருத்திகாவின் உறவினர்களிடையேயும், திருப்பூர் மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி