தமிழ்நாடு

எந்த பெற்றோருக்கும் நேர கூடாத நிலை... பிள்ளை உடலை வீட்டில் வைக்க முடியாத அவலம் - ரணமாக்கும் சம்பவம்

தந்தி டிவி

வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 4 வயது பிஞ்சின் உயிர் பிரிந்திருக்கிறது. மனதை ரணமாக்கும் இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நாய்க்கடி பாதிப்புகள் அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை புள்ளி விவரம் வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த கோரச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது...

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி....

இவரது நான்கு வயது குழந்தையை, கடந்த ஜூன் 27 ஆம் தேதி அவர் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, சாலையில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று கடித்து குதறி இருக்கிறது...

இதனால், ரேபிஸ் தொற்று ஏற்பட்டு கடந்த 10 நாள்களுக்கு மேலாக மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த அந்த பிஞ்சின் உடலில் இருந்து தற்போது உயிர் பிரிந்திருக்கிறது...

ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிருக்கு போராடி வந்த குழந்தை பலி

ரேபிஸ் தொற்று ஏற்பட்டதால், குழந்தையின் சடலத்தை அவரின் வீட்டுக்கு கொண்டு செல்லாமல், நேராக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று புதைத்திருக்கின்றனர் அதிகாரிகள்...

இதனால், அந்த குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் சுடுகாட்டில் வைத்து இறுதி சடங்குகள் செய்து வீடு திரும்பி இருக்கின்றனர்... இதனால் அவர்கள் அடைந்த துயரத்தை சொல்லி மாளாது...

நண்பர்களுடன் தெருவில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த நிர்மல் என்ற அந்த குழந்தை... முகம், தாடை என உடலின் சில பகுதிகள் நாய் கடித்ததில் சிதைந்து உயிருக்கு போராடிய அவலம் தமிழகத்தில் முதல் முறையல்ல...

இதனிடையே, நாய் கடித்து படுகாயமடைந்த தன் மகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சிறுமியின் தாய் தொடர்ந்த வழக்கில், தனி நபரின் நாய் கடித்ததற்கு அரசு பொறுப்பேற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது..

இவ்வாறு இருக்க, தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாய்கடி சம்பவங்களும், அதன் பாதிப்புகளும் அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை புள்ளி விவரம் வெளியிட்டிருக்கிறது...

அதே சமயத்தில் தாங்கள் இதுவரை தெருவில் சுற்றித்திரியும் நாய்களை சிறைப்பிடித்த புள்ளி விவரத்தையும், வெறிநாய் கடித்து ஏற்படும் ரேபிஸ் தொற்றுக்கு எதிராக மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கையின் புள்ளி விவரங்களையும் வெளியிட்டிருக்கின்றனர்...

இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு உரிய தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்