கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், வருவாய்துறையினர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், தன்னார்வலர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.