கொசுக்களை ஒழிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ், தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் கொசுகளால் பரவி வரும் நோய்களால், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொசு ஒழிப்பு பணிக்கு அரசு நிரந்தர பணியாளர்களை நியமிக்கவில்லை என கூறியிருந்தார். எனவே கொசு ஒழிப்பிற்கு நிரந்தர பணியாளர்களை நியமித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை தீர்ப்பாக வழங்க இயலாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.