மணப்பாறை அருகே அரசுப் பேருந்தும், டிராக்டரும் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில்10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். அவரை அப்பகுதி மக்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்து ஓட்டுநரை மீட்கும் பணி சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.