இந்நிலையில், செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக, துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதால், தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், விரிவான ஆலோசனைக்குப் பிறகு விதிமுறைகள் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.