தமிழ்நாடு

அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர்கள் தரமில்லாத‌தால் வீணாகிறது - பொதுமக்கள் குற்றச்சாட்டு

அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர்கள் தரமில்லாத‌தால், பழைய இரும்பு கடைகளில் சொற்ப விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இந்திராநகர் பகுதியில் உள்ள இரும்பு கடைகளில் அரசின் இலவச மிக்ஸி , கிரைண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது, பொருட்கள் தரமில்லாத‌தால், மக்கள் பழைய இரும்பு கடைகளில் சொற்ப விலைக்கு கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். கடை உரிமையாளர்கள் மிக்ஸி கிரைண்டர்களை உடைத்து, அதில் உள்ள காப்பர் , மோட்டார் போன்ற முக்கிய பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு தூக்கி எறிந்து விடுகின்றனர். ஏழை மக்களுக்காக அரசு கொடுத்த விலையில்லா பொருட்கள், தரமில்லாத‌தால் இவ்வாறு வீணாகி வருவதாக பொதுமக்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்