தமிழ்நாடு

கஜா புயல்: மத்திய அரசிடமிருந்து கோரப்படும் உதவித் தொகை...

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கவும், நிவாரண பணிகளுக்காகவும் மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கோரியுள்ளார்

தந்தி டிவி

* உயிரிழந்தவர்களுக்கான கருணைத் தொகை வழங்க 4 கோடியே 50 லட்சமும், வாழ்வாதாரத்துக்கான நிதியுதவி வழங்க 200 கோடியும் தமிழக அரசு கோரியுள்ளது. சேதமடைந்த குடிசை வீடுகளுக்கான தற்காலிக நிவாரணம் வழங்க 100 கோடி உள்பட நிரந்தர நிவாரணம் வழங்க 6 ஆயிரம் கோடியும், கால்நடை உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்க ஒன்றரை கோடியும், விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் தற்காலிக நிவாரணத்துக்கு 87 கோடி உள்பட நிரந்தர நிவாரணமாக 625 கோடி ரூபாயும் தமிழக அரசு கோரியுள்ளது.

* மின்சாரம் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு 685 கோடி ரூபாய் உள்பட நிரந்தரமாக பணிகளை முடிக்க 7 ஆயிரத்து 77 கோடி ரூபாயும், மீன்வளத்துறையில் தற்காலிக பணிகள் மற்றும் நிவாரணம் வழங்க 76 கோடி உள்பட நிரந்தர நிவாரணமாக 100 கோடி நிதியும் கோரப்பட்டுள்ளது. இதுபோன்று நீர்வள ஆதாரம் தற்காலிக பணிக்கு 16 கோடி உள்பட நிரந்தர பணி மேற்கொள்ள 120 கோடி ரூபாயும் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சுகாதார தற்காலிக பணிகளுக்கு முறையே 57 கோடி மற்றும் 8 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது.

* மாநில நெடுஞ்சாலைகள் சீரமைப்பு தற்காலிக பணிக்கு 119 கோடி உள்பட நிரந்தர பணி மேற்கொள்ள 378 கோடி கோரப்பட்டுள்ளது.பேரூராட்சிகள் நிவாரணத்துக்கு தற்காலிகமாக 5 கோடி ரூபாய் உள்பட 30 கோடியும், நகராட்சிகள் தற்காலிக நிவாரணத்துக்காக 2 கோடி உள்பட 5 கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சித்துறை பணிகளை தற்காலிகமாக மேற்கொள்ள 62 கோடி ரூபாய் உள்பட 425 கோடியும், வனத்துறைக்கு தற்காலிகமாக பணிகளை மேற்கொள்ள 2 கோடி ரூபாய் மற்றும் கால்நடை தற்காலிக பராமரிப்புக்கு 6 கோடி உள்பட150 கோடி ரூபாய் என மொத்தம் ஆயிரத்து 431 கோடி ரூபாயும், நிரந்தர புனரமைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிக்காக 14 ஆயிரத்து 910 கோடி ரூபாயும் மத்திய அரசிடம் நிவாரணமாக தமிழக அரசு கோரியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி