முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுல கிருஷ்ணன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், விவசாய குடும்பத்தில்பிறந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, குஜராத் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, அம்மாநில ஆளுநர் என பல பொறுப்புகள் வகித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் என பி.ஆர் கோகுல கிருஷ்ணனுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.