தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து 9 பேருடன் மீன் பிடிப்போருக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்றது ஒரு தோணி. மாலத்தீவு அருகே நடுக்கடலில் சென்ற போது திடீரென காற்றின் வேகத்தில் தோணி அலைக்கழிக்கப்பட்டு தத்தளித்துள்ளது. செய்வதறியாது உயிருக்கு போராடிய நிலையில், தோணி கடலில் மூழ்கியது. நல்வாய்ப்பாக மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி நோக்கி மற்றொரு தோணியில் வந்தவர்கள், சக மீனவர்கள் 9 பேரையும் பத்திரமாக மீட்டு கரைசேர்த்தனர். காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தில் சிக்கிய அவர்கள், தாங்கள் உயிருடன் மீட்கப்பட்டதை மறுபிறவி எடுத்ததாக கூறுகின்றனர்.