சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 தனியார் பேருந்துகளில் திடீரென தீப்பிடித்தது.
இதன் காரணமாக பேருந்து நிலைய பகுதிகளில் இருந்து கரும்புகை கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.