ஈரோடு மாவட்டம் பவானியில் அந்தியூர் பிரிவு சாலை அருகே கைத்தறி நெசவுக்கு தேவையான நூல்களை பதப்படுத்துவதற்கு நெசவாளர்கள் நடு கற்களை அமைத்து பயன்படுத்தி வந்தனர். அவை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி நெடுஞ்சாலைத்துறையினர் நீதிமன்ற உத்தரவை பெற்று போலீஸ் பாதுகாப்புடன் கற்களை அகற்ற முயன்றனர். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினரிடைய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது.