ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில், சாலைகளில் மணல் புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள், மாணவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. புதைவட கம்பிகள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் எனக் குற்றம்சாட்டிய சமூக ஆர்வலர்கள், புழுதி காரணமாக மூச்சுதிணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மக்கள் நலன் கருதி, உடனடியாக குமாரபாளையத்தில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.