Elephant | Dog | Viral Video | யானையை விரட்ட குரைத்த நாய்கள் - வெறியாகி பிளிறியபடி துரத்திய யானை #nilgiri #dog #elephant நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மாக்கமூலா கிராமத்தில் அதிகாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மாக்கமூலா பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் யானை ஒன்று நுழைந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். அப்போது, அங்கிருந்த இரண்டு வளர்ப்பு நாய்கள் யானையைப் பார்த்து குரைத்தபடி அதனை துரத்த முயன்றன. இதனால் ஆவேசமடைந்த யானை, துதிக்கையைத் தூக்கி பிளிறியபடி நாய்களை நோக்கி வேகமாக ஓடியது. இதைக் கண்டு அச்சமடைந்த நாய்கள் அங்கிருந்து தப்பி ஓடின.