Sriperumbudur | ஹான்ஸ் கேட்டு உ.பி. நபர் தகராறு - போலீஸ் அடியில் கல்லீரல் கிழிந்து மரணம்.?
#Sriperumbudur #NorthIndian #Crime #TNPolice #Arrest #ThanthiTV Sriperumbudur | ஹான்ஸ் கேட்டு உ.பி. நபர் தகராறு - போலீஸ் அடியில் கல்லீரல் கிழிந்து மரணம்.? - ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காவலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, காவலர் தாக்கியதாக கூறப்படும் சில மணி நேரத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், காவலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சைலேஷ் குமார் என்ற இளைஞர், நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், மதுபோதையில் மளிகைக் கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவலர் ஞானமூர்த்தி, சைலேஷ் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. நண்பர்கள் அவரை அழைத்துச் சென்ற சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், தாக்குதலால் கல்லீரல் கிழிந்து ஏற்பட்ட காயம் உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவலர் ஞானமூர்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் ஆரிப் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
