முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். காந்தியின், 150ஆம் ஆண்டு நிறைவு விழாவை, அனைத்து மாநிலங்களிலும், சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். கூட்டம் முடிந்ததும், பிரதமரை சந்தித்து, தமிழகத்தின் தேவைகள் குறித்து, மனு அளிக்க உள்ளார். அதன்பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளார். நாளை காலை, முதல்வர், சென்னை திரும்புகிறார்.