தமிழ்நாடு

பத்திரப்பதிவு முன் பதிவு செய்த வரிசையின் அடிப்படையிலேயே நடைபெறும் - தமிழக அரசு

ஸ்டார் 2.0 மென்பொருள் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் முன் பதிவு செய்த வரிசையின் அடிப்படையில் பத்திரப்பதிவு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக பதிவுத்துறைத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவணம் பதிவு செய்யும் நடைமுறையானது ஸ்டார் 2.0 மென்பொருள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முன் பதிவு செய்த டோக்கன் வரிசையில் சேவை என்ற முறையில் மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டு, 51 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களால் பெரும் வரவேற்பை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடைமுறை செப்டம்பர் 17ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் டோக்கன்களை 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் எனவும் அதன் மூலம் முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என்ற முறையில் ஆவணப்பதிவு செய்யப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட டோக்கனுக்கான நபர் குறித்த நேரத்தில் வரவில்லை எனில் மென்பொருளில் உள்ள வரையறுக்கப்பட்ட காரணங்களில் தகுந்த காரணத்தை பணியாளர்கள் தேர்வு செய்துவிட்டு, பின்னர் அடுத்த டோக்கனுக்கான பதிவு நடவடிக்கையை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திர பதிவை சிரமுமின்றி கையாள மாவட்டப் பதிவாளர்கள், பதிவு அலுவலர்களுக்கு உரிய பயிற்சியை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 17ம் தேதி அமல்படுத்தப்படவுள்ளதை பதிவு அலுவலர்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு தெரிவித்து இம்முறையை செவ்வனே செயல்படுத்த ஊக்குவிக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி