தி.மு.க. வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ராதாபுரம் தொகுதியில் மறுபடியும் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் முடிவுகளை வெளியிட தடை கோரி எம்.எல்.ஏ. இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்கால தடைவிதித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.எல்.ஏ இன்பதுரை தி.மு.க வேட்பாளர் அப்பாவு ஆகிய இரு தரப்பும் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இறுதி விசாரணை குறித்து வரும் 29ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.